search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சார் பதிவாளர் அலுவலகத்தில் இடை தரகர்களின் அத்துமீறல்
    X

    மாரண்டஅள்ளி சார் பதிவாளர் அலுவலகம்.

    சார் பதிவாளர் அலுவலகத்தில் இடை தரகர்களின் அத்துமீறல்

    • பொதுமக்கள் பத்திர பதிவு அலுவலகத்தை நாடி வருகின்றனர்.
    • பொதுமக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வருகின்றனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது . மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினந்தோறும் பத்திரப்பதிவு செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் ஆவண பதிவிற்காக வந்து செல்கின்றனர். ஆவண பதிவு என்பது அரசு துறையில் மிக முக்கியமாக பங்கை வகிக்கிறது வீடு, வணிகநிறுவனம், விவசாய நிலம், பூர்வீக சொத்து, பதிவுத் திருமணம் என அனைத்தையும் பத்திர பதிவு செய்ய வேண்டி இருப்பதால் பொதுமக்கள் பத்திர பதிவு அலுவலகத்தை நாடி வருகின்றனர்.

    இவர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய உதவியாக சார்பதிவாளர் அலுவலகத்தில் உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்கள் உள்ளனர்,

    ஆனால் மாரண்டஅள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர் என்று சொல்லி பொதுமக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வருகின்றனர்.

    கிராம பகுதியில் இருந்து வரும் பொதுமக்கள் இடைத்தரகர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு பல லட்சம் ரூபாய் தினந்தோறும் இழந்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×