என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகமங்கலம் ஊராட்சியில் குழந்தைகளுக்கான குறைபாடு கண்டறியும் முகாம் நடந்தபோது எடுத்தப்படம்.
நாகமங்கலம் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்
- வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார்.
- 157 குழந்தைகளுக்கு ரத்தம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தேன்கனிக்கோட்டை ஜீவன் மருத்துவமனை இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே முதல் முறையாக 5 வயதிற்குட்பட்ட குழைந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடு கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் கெலமங்கலம் அடுத்த நாகமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கிவைத்தார். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரும், ஊட்டச்த்து நிபுணருமான ஹரிஹரன் குழந்தை வளர்ப்பு மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்கினார்.
முகாமில் கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 வயதிற்குட்பட்ட 157 குழந்தைகளுக்கு ரத்தம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இதில் 80 குழந்தைகளுக்கு ரத்த சோகை மற்றும் மூளை வளர்ச்சியின்மை போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் சிவகுருநாதன், நவீன், அசோக், இளங்கோ ஆகியோர் செய்திருந்தினர். முகாமில் பள்ளி சிறார் நலத்திட்ட மருத்துவர்கள் சங்கீதா, மணிகண்டன், கெலமங்கலம் ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளார் சேகர் நன்றி கூறினார்.






