என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெலமங்கலம் பேரூராட்சியில்   ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    கெலமங்கலம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது எடுத்த படம்.

    கெலமங்கலம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளின் முன்பு சாக்கடை கால்வாய்களுக்கு இடையூறு.
    • பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சாக்கடை கால்வாய்களை அகற்றி சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அங்கிருந்து அகற்றினர்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேரூராட்சியில் 8-வது மற்றும் 10-வது வார்டுக்குட்பட்ட சவுடேஸ்வரி கோயில் தெருவில், கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளின் முன்பு சாக்கடை கால்வாய்க ளுக்கு இடையூறாக வும்,ஆக்கிரமித்தும் கட்டிடங்களை கட்டியி ருப்பதாகவும் அதை உடனடியாக அகற்ற வேண்டுமென்று பேரூராட்சி தலைவர்தேவராஜூக்கு பொதுமக்கள் சார்பில் புகார் சென்றது.

    இதையடுத்து பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் நாகேந்திர குமார்,கவுன்சிலர் மாலா நாகராஜ், வச்சலா கமல் ஆகியோர் சென்று பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சாக்கடை கால்வாய்களை அகற்றி சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அங்கிருந்து அகற்றினர்.பொதுமக்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய பேரூராட்சி தலைவர் தேவராஜுக்கு அப்பகுதிமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×