search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே சலசப்பாடி மலைக்கிராமத்தில்  சாலை வசதி அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்  -கலெக்டர் சாந்தி தகவல்
    X

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள சித்தேரி ஊராட்சி கலசப்பாடி மலைக்கிராமத்தில் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளினை கலெக்டர் சாந்தி பார்வையிட்டார். அங்கு மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். 

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே சலசப்பாடி மலைக்கிராமத்தில் சாலை வசதி அமைப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் -கலெக்டர் சாந்தி தகவல்

    • தொலைத்தொடர்பு சேவை தொடக்க விழா நடைபெற்றது.
    • ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வசதி, உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சித்தேரி ஊராட்சியில் இதுவரை தொலைத்தொடர்பு சேவையே இல்லாத மலை கிராமமான கலசப்பாடி - அக்கரைகாடு மலைப்பகுதியில் மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக தனியார் (ஜியோ டெலிபோன் டவர்) தொலை த்தொடர்பு கோபுரம் அமைக்க ப்பட்டு, தொலைத்தொடர்பு சேவை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையேற்று, மலைவாழ் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட தனியார் (ஜியோ டெலிபோன் டவர்) தொலைத்தொடர்பு கோபுரம் - தொலைத்தொடர்பு சே வையினை தொடங்கிவைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காகவும், அவர்களின் வாழ்க்கைத்தர உயர்விற்காகவும் முன்னுரிமை கொடுத்து அரசின் நலத்திட்டங்களும், அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கான வளர்ச்சி திட்டங்களும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைகிராமமான சித்தேரி ஊராட்சியில் உள்ள கலசப்பாடி - அக்கரைகாடு உள்ளிட்ட மலைகிராமங்களில் சாலை வசதிகள், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வசதி, உண்டி உறைவிட பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இங்கு வாழும் மக்கள் வேறு எங்கு வேண்டு மானாலும் கைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வசதியும், வாய்ப்பும் இந்த சித்தேரி ஊராட்சியில் உள்ள மலை கிராமமான கலசப்பாடி - அக்கரைகாடு மலைகிராம மக்களுக்கு இன்று முதல் கிடைத்துள்ளது. இத்தகைய தொலைத்தொடர்பு சேவையினை அமைத்து கொடுத்த தனியார் (ஜியோ) நிறுவனத்திற்கும், இந்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு உதவியாகவும், உறு துணையாகவும் இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், சித்தேரி ஊராட்சியில் உள்ள மலை கிராமமான கலசப்பாடி - அக்கரைகாடு மலைக்கிராமமானது வாச்சாத்தியிலிருந்து வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைப்பகுதிகளை கடந்து அரசநத்தம் வழியாக சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வாச்சாத்தியிலிருந்து அரசநத்தம் வழியாக கலசப்பாடி மலைக்கிராமத்திற்கு சாலை வசதி அமைப்பதற்கு சுமார் 8 கி.மீ தொலைவும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இச்சாலை அமைக்க வனத்துறையின் அனுமதி பெறுவதற்கு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டு, ஒன்றிய அரசில் கோப்பு கடைசி கட்ட நிலையில் உள்ளது.

    அவர்கள் இதுகுறித்து மத்திய வனத்துறையின் அனுமதி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டு, அனுமதி பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். எனவே, வனத்துறையின் அனுமதி கிடைக்கப்பெற்ற வுடன் இச்சாலை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்ப டும். இதுவரை சாலை வசதியே இல்லாத இந்த மலைக்கிராமத்திற்கு விரைவில் சாலை வசதி அமையும் வாய்ப்பு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×