search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடங்கம் ஊராட்சியில்சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணி
    X

    தடங்கம் ஊராட்சியில்சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணி

    • தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.
    • ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட சிப்காட் அமையவிருக்கும் 100 அடி சாலையில் தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கும் பணியினை மாவட்ட கலெக்டர் சாந்தி இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி வட்டம் அதகப்பாடி, நல்லம்பள்ளி வட்டம் தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஅள்ளி ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்து சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

    சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-44லிருந்து 1.35 கி.மீ. தூரமுள்ள சாலை மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.14.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சுற்றுசூழல் அனுமதி பெற ITCOT நிறுவனத்தின் மூலம் முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலைகளை அமைக்க பல முன்னணி நிறுவனங்கள் பார்வையிட்டு தேவையான நிலங்களை ஒதுக்க சிப்காட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    தருமபுரி சிப்காட் தொழிற்பூங்காவில் OLA Electric Mobility Pvt. Ltd. நிறுவனம் தொழிற்சாலை அமைக்க 700 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய ஆணையிடப்பட்டு நிலம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன் (பாலக்கோடு), ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகரமன்ற தலைவர் லட்சுமி, நல்லம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி, நல்லம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பெரியண்ணன், சிவப்பிரகா சம், வட்டாட்சியர்கள் வெங்கடே ஷ்வரன் (சிப்காட்), ஆறுமுகம் (நல்லம்பள்ளி) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×