என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சிக்காக மாணவ மாணவிகள் தயார் நிலையில் வந்த காட்சி.
சூளகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் களை கட்டிய கலைத்திருவிழா
- 73 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
- ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டத்திற்கு அலங்காரத்துடன் தயார் நிலையில் வந்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளான நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மாதிரி பள்ளிகள் ஆகிய 73 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.
8- வகுப்பு மாணவர்களுக்கு ஓவியம் , கட்டுரை, பேச்சு போட்டி, கை எழுத்து போட்டி, பாட்டு போட்டி, சிற்பம் வடித்தல், பட்டி மன்றம், கவிதை போட்டிகள், நடனம், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெருகிறது. அதற்காக இன்று வருகை தந்த மாணவர்கள் ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி ஆட்டத்திற்கு அலங்காரத்துடன் தயார் நிலையில் வந்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் முத்தே கவுடா தலைமையில் சிறப்பு விருந்தினராக ஓசூர் கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முனிராஜ் மற்றும் பி.டி.ஏ. தலைவர் ராமன், நிர்வாகிகள் சேகர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






