என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமல்பட்டியில்  தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரை மாய்த்த பிளஸ்-2 மாணவி
    X

    மாணவி காவியா

    சாமல்பட்டியில் தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரை மாய்த்த பிளஸ்-2 மாணவி

    • 242 மதிப்பெண்கள் எடுத்தும் தேர்ச்சி ஆகவில்லை.
    • மன உலைச்சலில் மாணவி வீட்டில் தூக்குபோட்டார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்க ரையை அடுத்த சாமல்பட்டி காந்தி நகரைச் சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மகள் காவியா (வயது17). இவர் ஊத்தங்கரை மகளிர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 கணிதப் பாடப் பிரிவில் படித்து வந்தார்.

    நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் காவியா தேர்வில் தோல்வியடைந்ததாக தெரிகிறது. அவர் 600 மதிப் பெண்ணுக்கு 242 பெற்றுள்ளார்.

    மேலும் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் தேர்ச்சி மற்றபாடங்களில் தேர்வாகவில்லை. இதன் காரணமாக மன விரக்தி அடைந்து மாணவி வீட்டில் தூக்குபோட்டு உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாமல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×