என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாப்பாரப்பட்டியில் குளிர் பிரதேசங்களில் மட்டும் வளரும் அதிசய திருவோடு மரம்
  X

  தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டப வளாகத்தில் வளர்ந்து வரும் திருவோடு மரம்.

  பாப்பாரப்பட்டியில் குளிர் பிரதேசங்களில் மட்டும் வளரும் அதிசய திருவோடு மரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மிகவும் கடினத்தன்மை வாய்ந்த திருவோடு மரத்தின் பழங்கள் உடைக்க இயலாத அளவுக்கு கடினமாக இருக்கும்.
  • மரத்திலிருந்து கீழே விழும் பழங்களில் உள்ள விதைகள் ஓடுகளால் மூடப்பட்டுள்ளன.

  தருமபுரி,

  சாமியார்கள் தங்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப்போம். அதன் மூலம் அவர்கள் வீடுகள் தோறும் உணவு சேகரிப்பது வழக்கம்.

  அதேபோல், கோவில்களுக்கு முன்பு பிச்சைக்காரர்களும் திருவோட்டுடன் அமர்ந்திருப்பர். கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டிச் செய்ததைப் போல் திருவோடு இருக்கும். அதில்தான் அரிசியோ, பணமோ வாங்கிக் கொள்வார்கள்.

  திருவோடு, அட்சய பாத்திரம்போன்றவற்றை தயாரிக்க பயன்படும் காய்களை விளைவிக்கும் மரங்கள் குளிர்ச்சி நிறைந்த வடமாநிலங்களில் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள சில சைவ மடங்களில் இவை அரிதாக காணப்படுகின்றன.

  இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில்:-

  சாமியார்கள் திருவோட்டைத் தேர்வு செய்து பயன்படுத்த காரணம் உள்ளது. இந்த மரத்தின் ஓட்டில் உணவை வைப்பதன் மூலம் விரைவில் கெடாது. உடலுக்கும் வலுவைக் கொடுக்கும் தன்மையுடையது. எனவேதான்,

  திரு என்ற அடைமொழியுடன் இம்மரத்தை அழைக்கின்றனர். இந்த வகை மரம் மெக்ஸிகன் காலாபேஷ் என்று அழைக்கப்படுகிறது. இது மலர்க்குடும்பத்தை சேர்ந்தாகும்.

  திருவோடு மரத்தின் பூா்வீகம் தெற்கு மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்காவின் தெற்கில் உள்ள கோஸ்டாரிக்கா வரையுள்ள பகுதிகளாகும். மிகவும் கடினத்தன்மை வாய்ந்த திருவோடு மரத்தின் பழங்கள் உடைக்க இயலாத அளவுக்கு கடினமாக இருக்கும்.

  இதன் சுற்றளவு 7முதல் 10 செ.மீ. ஆகும். நாகலிங்க மரத்தில் இருக்கும் காய்களைப் போன்ற தோற்றம் கொண்டிருக்கும். இந்தப் பழம் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும் குணாதிசயம் கொண்டது. எனவே, இப்பழத்தில் இருக்கும் விதைகளை எளிதில் பிரிக்க முடியாது.

  மரத்திலிருந்து கீழே விழும் பழங்களில் உள்ள விதைகள் ஓடுகளால் மூடப்பட்டுள்ளன. காடுகளில் கூட இந்த வகை மரங்கள் பரந்து வளராமல் இருப்பதற்கு இதுவே காரணம் என்று அவா் தெரிவித்தாா்.

  இந்த அதிசய மரத்தை செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் பாதுகாத்து வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×