search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில்   அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல்  தகராறில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு
    X

    போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தகராறில் ஈடுபட்ட 9 பேர் மீது வழக்கு

    • தாசில்தார் அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தமைக்காகவும் ஒருமையில் பேசியதற்காகவும் 9 பேர் மீது வழக்கு பதிவு.

    மாத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், இவருடைய மகன்கள் சரண்ராஜ் (33) குமரவேல் (35) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 5 சென்ட் நிலம், பட்டா வழங்கியதில் தவறு நடந்திருப்பதாகவும் அதனை மாற்றி கொடுக்கும்படி போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இந்த மனுவின் மீது தாசில்தார் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி நேற்று குமரவேல், சரண்ராஜ், முருகேசன், உள்ளிட்ட 9 பேர் தாசில்தார் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடத்தில் துணை வட்டாட்சியர் சீனிவாசன் தங்கள் கோரிக்கைகளை பரிசிளிப்பதாகவும் கலைந்து செல்லும்படியும் வலியுறுத்தி உள்ளார்.

    ஆனால் போராட்டக்காரர்கள் தகாத வார்த்தைகளால் ஒருமையாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

    பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்கள் மீது தாசில்தார் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தமைக்காகவும், ஒருமையில் பேசியதற்காகவும், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×