என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

பென்னாகரத்தில்கலெக்டர் ஆய்வு

- தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
- விரைந்து பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டுவனஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
2022-23 நிதியாண்டில் 18.9 லட்சம் மதிப்பீட்டில் காந்தி நகர் முதல் செமடையான்கொட்டாய் வரை சாலை அமைத்தல், 15ஆவது நிதி குழு மானியத்தின் கீழ் 2020-21 ஆம் நிதி ஆண்டில் 4.57 லட்சம் மதிப்பீட்டில் எலுமல்மந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்கள் சுகாதார வளாகம் அமைத்தல், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் நிதியாண்டில் 55.2 லட்சம் மதிப்பீட்டில் தாசம்பட்டி திகிலோடு சாலை முதல் குஞ்சன் கொட்டாய் வரை சாலை மேம்பாடு செய்தல், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் 2021- 22 ஆம் இந்த ஆண்டில் 3.4 லட்சம் மதிப்பீட்டில் நாகனம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடம் மறு சீரமைப்பு செய்தல், சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 1.8 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணி, பிரதான் மந்திரி கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் நிதி ஆண்டில்1.99 கோடி மதிப்பீட்டில் பவளந்தூர் முதல் தாசம்பட்டி வழியாக பாய்பள்ளம் சாலை மேம்பாடு செயயும்பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 3.76 லட்சம் மதிப்பீட்டில் வட்டுவனஅள்ளி ஊராட்சியில் கூடுதல் நர்சரி அமைத்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021- 22 ஆம் நிதி ஆண்டில் 3.15 லட்சம் மதிப்பீட்டில் உப்பலாபுரம் கிராமத்தில் தானியக்களம் அமைத்தல், 3.15 லட்சம் மதிப்பீட்டில் பருவதனஅள்ளி கிராமத்தில் தானியக்களம் அமைத்தல் என மொத்தம் 2.93 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளை தருமபுரி கலெக்டர் சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சித் திட்டப் பணிகளை தரமானதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து எலுமல்மந்தை நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் எடை தரம் குறித்தும், அரசின் சார்பில் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் வழங்குவது குறித்து கடை ஊழியர்களிடம் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
