search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில்  குவிந்துகிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு  -பொதுமக்கள் அவதி
    X

    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதியில் குவிந்துகிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு -பொதுமக்கள் அவதி

    • குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகிறது.
    • தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகிறது.

    பல நாட்கள் அள்ளப் படாமல் தேங்கி இருப்பதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி பத்திரப்பதிவு துறை அலுவலகம் முன்பு பல நாட்களாக குப்பைகள் தேங்கி கிடக்கின்றன.

    இந்த அலுவலகத்திற்கு எதிரே பள்ளி மாணவர்கள் விடுதி உள்ளது .

    பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடசமுத்திரம், பொம்மிடி, பள்ளிப்பட்டி ,கோம்பூர், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள்தோறும் பேரூராட்சி அலுவலகத்துக்கு வருகின்றனர். தொற்றுநோய் மற்றும் நோய் பரவும் அபாய நிலை உள்ளதால் பேரூராட்சி நிர்வாகம் முறையாக குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×