என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூரில் மின்சார வாரிய பணியாளர்களுக்கு மின் பாதுகாப்பு குறித்து காலாண்டு பாதுகாப்பு பயிர்ச்சி வகுப்பு கோட்ட செயற்பொறியாளர் இந்திரா தலைமையில் நடைபெற்றது.
மத்தூரில் மின் பாதுகாப்பு குறித்து பயிற்சி
- மின்பாதைகளில் பணியில் ஈடுபடும் போது உரிய உபகரணங்கள் கொண்டு மின்மாற்றிகளை எவ்வாறு இயக்க வேண்டும்.
- மின்விபத்துகள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்னார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி உத்தரவின் போச்சம்பள்ளி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா தலைமையில் காலாண்டு பாதுகாப்பு வகுப்பு பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் மண்டல உதவி செயற்பொறியாளர் (பாதுகாப்பு) ராஜா மின்சார வாரிய பணியார்களிடம் மின் விபத்து குறித்தும், பணியாளர்கள் மின்பாதைகளில் பணியில் ஈடுபடும் போது உரிய உபகரணங்கள் கொண்டு மின்மாற்றிகளை எவ்வாறு இயக்குவது, மின்விபத்துகள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்னார். முன்னதாக இப்பயிற்சி வகுப்பிற்கு மத்தூர் உதவி செயற்பொறியாளர் மகாலட்சுமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இதில் போச்சம்பள்ளி உதவி செயற்பொறியாளர் ஸ்டாலின், ஊத்தங்கரை உதவி செயற்பொறியாளர் மணி, பர்கூர் உதவி செயற்பொறியாளர் நாகராஜ் மற்றும் போச்சம்பள்ளி கோட்டத்திற்குட்பட்ட உதவி பொறியாளர்கள், மின்பாதை மேற்பார்வையாளர்கள், மின்பாதை ஆய்வாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மத்தூர் உதவி பொறியாளர்கள் பெருமாள், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.






