என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரண்ட‌அள்ளியில்  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    X

    மாரண்ட‌அள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

    • அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற நிகழ்ச்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    • தங்கள் பழைய நினைவு களை பகிர்ந்து கொண்டு மேலும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவ வேண்டும்.

    மாரண்ட‌அள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1974 -75 -ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக் கொண்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    65-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் அவர்கள் குடும்பங்களுடன் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் சந்தித்துக் கொண்டனர்.

    அப்போது அவர்கள் கல்வி பயின்ற தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன், அறிவியல் ஆசிரியர் உஷா மணி அன்பழகன், கணித ஆசிரியர் ராஜகோபால், பள்ளி உதவியாளர் மற்றும் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தி அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற நிகழ்ச்சி பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிகழ்ச்சியில் வெளி மாநிலமான பெங்களூர், மைசூர், ஆந்திர பிரதேசம், மற்றும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களான சென்னை, கோயமுத்தூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பகுதியில் இருந்து தங்கள் பிள்ளைகளுடன் அனைவரும் கலந்து கொண்டனர்.

    தங்கள் பழைய நினைவு களை பகிர்ந்து கொண்டு மேலும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகளுக்கு வர்ணம் பூசி கொடுத்தனர். பின்னர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் குழாய்கள் அமைத்து கொடுத்தனர்.

    Next Story
    ×