என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாமாங்கம் பகுதியில் மூட்டை மூட்டையாக வெள்ளைக்கல் கடத்தல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- மாமாங்கம் பகுதியில் வெள்ளைக்கல் குவாரி அதிக அளவில் உள்ளது.
- இந்நிலையில், மாமாங்கம் ஊற்றுக்கிணறு பகுதியில் உள்ள குவாரியில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வெள்ளைக் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
சேலம்:
சேலம் மாநகர் மாமாங்கம் பகுதியில் வெள்ளைக்கல் குவாரி அதிக அளவில் உள்ளது. இந்த குவாரிக்குள் இறங்கி சமூக விரோதிகள் சட்ட விரோதமாக வெள்ளை கற்களை வெட்டி பதுக்கி, அதை இரவு நேரங்களில் லாரியில் ஏற்றி கடத்தி செல்கின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்நிலையில், மாமாங்கம் ஊற்றுக்கிணறு பகுதியில் உள்ள குவாரியில் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் வெள்ளைக் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வெள்ளைக்கல் கடத்தலை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
Next Story