என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட பாலம்.
குமாரபாளையத்தில்கோம்புப்பள்ளம் உயர்மட்ட பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
- தமிழக முதல்வரால் காணொளி மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட 2 கோடி மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுமான பணி கடந்த மார்ச் முதல் நடைபெற்று வந்தது.
- தற்போது அனைத்து கட்ட பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் தம்மண்ணன் சாலை, அப்பன் பங்களா பகுதியில் தமிழக முதல்வரால் காணொளி மூலம் அடிக்கல் நாட்டப்பட்ட 2 கோடி மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுமான பணி கடந்த மார்ச் முதல் நடைபெற்று வந்தது. பல மாதங்களாக நடைபெற்ற நிலையில், கடும் மழையின் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த வழியில் விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள், கோவில்கள், தனியார் கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், உள்ளன. இதில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்தன. பாலம் கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில், சுமார் 3 கி.மீ.தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
பல கி.மீ.தூரம் சுற்றி சென்றுவருதால் காலவிரயம் ஏற்பட்டுவந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது அனைத்து கட்ட பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது.






