என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
- கூட்டம் கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
- வேட்புமனு பெற்று பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கர்நாடகா மாநில முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான தர்மசேனா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், கிராம காங்கிரஸ் கமிட்டி, வட்டார கமிட்டி, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு ஆகியவற்றிற்கான கட்சி தேர்தல் நடைபெற உள்ளன.
இந்நிலையில் அந்தந்த வட்டார, நகர காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவரிடம், வேட்புமனு பெற்று பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கலாம் என்றார்.
இதில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் காசிலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, நாஞ்சில் ஜேசு, நாராயணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் உமர்பாஷா, வக்கீல் அசோகன், மாவட்ட துணைத்தலைவர் விவேகானந்தன், கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளர்கள் காலய்யா, மகளிரணி ராதா, பன்னீர்செல்வம், கோவிந்தராஜ் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் சூரியகணேஷ், மாவட்ட சேவாதள முன்னாள் தலைவர் நாகராஜ், வட்டார தலைவர்கள் அயோத்தி, ஊத்தங்கரை ரவி, கிருஷ்ணகிரி நகர துணைத்தலைவர் ஹரி, மாவட்ட செயலாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






