என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
- கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்து, அனைத்து அரசு துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
- வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார்.
கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்து, அனைத்து அரசு துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோபு (பொது), குமரேசன்(நிலம்), மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாட்கோ பொது மேலாளர் யுவராஜ், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Next Story






