என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கிருஷ்ணகிரியில்  கனமழையால் தேங்கியுள்ள  மழைநீரை அகற்ற துரித நடவடிக்கை
  X

  கிருஷ்ணகிரியில் கனமழைக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நகராட்சி தலைவர் பரிதாநவாப் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

  கிருஷ்ணகிரியில் கனமழையால் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற துரித நடவடிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழைய பேட்டை நேதாஜி சாலை, 4, 8-வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர், எல்லப்பன் நகர் பகுதிகளில் நகராட்சி தலைவர் பரிதாநவாப் ஆய்வு செய்தார்.
  • பின்னர், ஆங்காங்கே தேங்கியிருந்து மழைநீரை உடனே வெளியேற்ற அறி வுறுத்தினர்.

  கிருஷ்ணகிரி,

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, சூளகிரி, தளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி, கிருஷ்ணகிரியில் 64.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. நேற்று பகலில் சாரல் மழை பெய்தது.

  மேலும், கிருஷ்ணகிரி நகரில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் மக்கள் அவதியுற்றனர். 5 ரோடு பெங்களூர் சாலையில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து, ஜே.சி.பி வாகனம் கால்வாயில் இருந்து அடைப்புகள் அகற்றப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

  இதனை தொடர்ந்து நகராட்சியில் மழைக்கு பாதிக்கப்பட்ட பழைய பேட்டை நேதாஜி சாலை, 4, 8-வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர், எல்லப்பன் நகர் பகுதிகளில் நகராட்சி தலைவர் பரிதாநவாப் ஆய்வு செய்தார்.

  பின்னர், ஆங்காங்கே தேங்கியிருந்து மழைநீரை உடனே வெளியேற்ற அறி வுறுத்தினர். இதையடுத்து அவரது முன்னிலையில் மழைநீர் வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, நகராட்சி ஆணை யாளர்(பொ) சரவணன், சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், இளநிலை பொறியாளர் அறிவழகன், துப்புரவு ஆய்வாளர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் மீன் ஜெயக்குமார், சந்தோஷ், முகம்மது ஆசிப், செந்தில்குமார், தேன்மொழி, நிர்வாகிகள் கனல் சுப்பிரமணி, முனீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×