என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- அனைத்து மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு கிழக்கு மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக. கிருஷ்ணமூர்த்தி, காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் சேகர், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விக்னேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் உமர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் முபாரக் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பெறுப்பாளரும், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லக்குமார் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், ராகுல்காந்தியின் வளர்ச்சியை கண்டு தாங்கி கொள்ள முடியாத மத்திய அரசு ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும், பாராளுமன்றத்திற்கு நுழையக்கூடாது என்பதற்காக அவரது எம்.பி.பதவியும் பறித்துள்ளதை கண்டித்து வருகிற 15&ந் தேதி ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரெயில் நிலையத்தில் காலை 9 மணி அளவில் நடத்தப்பட உள்ள ரெயில் மறியல் போராட்டத்திற்கும், வருகிற 20-ந் தேதி அனைத்து மத்திய அரசு அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் மாவட்ட செயலாளர்கள், தனசேகரன், ஜெயசீலன், ஹரி, அமைப்புசார தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சிவலிங்கம், கலை இலக்கிய மாவட்டத் தலைவர் கோவிந்தசாமி, மாவட்டத் துணைத்தலைவர்கள் வின்செண்ட், விவேகானந்தன், நகர துணைத்தலைவர் இருதயம், கவுன்சிலர் விநாயகம், ஊடகப்பிரிவு தலைவர் கமலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






