என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெலமங்கலத்தில்செவிலியர்களுக்கு பாராட்டு விழா
    X

    கெலமங்கலத்தில்செவிலியர்களுக்கு பாராட்டு விழா

    • சுகாதார செவிலியராக பணிபுரிந்த காஞ்சனா கடந்த மாதம் 30-ம் தேதி பணி ஓய்வுபெற்றார்.
    • நிகழ்ச்சியின் முடிவில் சுகாதார ஆய்வாளர் சிவகுருநாதன் நன்றி கூறினார்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமுதாய சுகாதார செவிலியராக பணிபுரிந்த காஞ்சனா கடந்த மாதம் 30-ம் தேதி பணி ஓய்வுபெற்றார். அவருக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குனர் ரமேஷ்குமார் தலைமை வகித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். விழாவில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார், பயிற்சி மருத்துவர் விமல் முன்னிலை வகித்தனர்.

    அதேபோல் கெலமங்கலம் வட்டாரத்தில் அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த சிறப்பாக பணியாற்றிய 240 அனைத்து நிலை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியின் முடிவில் சுகாதார ஆய்வாளர் சிவகுருநாதன் நன்றி கூறினார்.

    Next Story
    ×