என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரி பட்டணத்தில் சிறப்பு முகாம்
- ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
- உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி தலைவர்உறுதி அளித்தார்.
காவேரிப்பட்டினம்
காவேரிப்பட்டினத்தில் சிறப்பு குறைதீர் வார முகாம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், காவேரிப்பட்டினத்தில் கழிப்பிட வசதி, சாக்கடை பிரச்சனை, ஓ. ஏ .பி., மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உதவித்தொகை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
பொதுமக்கள் மனுக்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் காவேரிப்பட்டினம் டவுன் வி.ஏ.ஓ., மருதுபாண்டி கவுன்சிலர்கள் நித்யா முத்துக்குமார், கவுன்சிலர்கள் அமுதா பழனி, தமிழ்ச்செல்வி சோபன்பாபு, கீதா சேகர், அமுதா சக்திவேல், கோகுல்ராஜ், வசந்தி சின்ராஜ், அபிராமி மதனகோபால், மற்றும் சுஜாதா, ஜாபர், திருமால், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






