என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரிமங்கலம் பகுதியில்   ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
    X

    அதிகாரிகள் ஜே.சி.பி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றிய போது எடுத்த படம்.

    காரிமங்கலம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
    • மொரப்பூர்-பாலக்கோடு ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ராமசாமி கோவில், கடைவீதி பஸ் ஸ்டாண்ட் , பாலக்கோடு ரோடு, மொரப்பூர் ரோடு ஆகிய பகுதிகளில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது. பல வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து மேற்கூரை, வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை அமைத்துள்ளனர்.

    இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். நாளுக்கு நாள் அதிகரித்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதை அடுத்து கலெக்டர் சாந்தி உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறை சார்பில் அவகாசம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ராமசாமி கோவில் வரை ஆக்கிரப்புகளை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

    இதில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவிபொறியாளர் கவிதா, உதவி பொறியாளர் நவீன் குமார் ஆகியோர் மேற்பார்வையில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஆக்கி ரம்புகளை அதிரடியாக அகற்றினர். தொடர்ந்து இன்று மொரப்பூர் ரோடு, பாலக்கோடு ரோடு ஆகிய பகுதிகளில் ஆக்கிரமப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×