என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்லாவி, ஊத்தங்கரை பகுதிகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைக்காரர்கள் 3 பேர் கைது
- தனிப்படை போலீசார் நேற்று கல்லாவி அடுத்த ஓலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு புகார் வந்தது. அவர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
அந்த தனிப்படை போலீசார் நேற்று கல்லாவி அடுத்த ஓலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் சோதனை நடத்தினர்.அந்த கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் கடையின் உரிமையாளர் ஞானவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ஊத்தங்கரை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தனர்.
அந்த கடையில் குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனால் கடையின் உரிமையாளர் நாராயணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் மற்றொரு மளிகை கடையில் போதை பொருட்கள் விற்றதாக கல்லூர் குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அவர்களிடம் இருந்து மொத்தம் 32 கிலோ குட்கா மற்றும் 21 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான அவர்கள் 3 பேரையும் ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.






