என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடத்தூரில் மருத்துவத்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள்
- மாணவர்கள் இடையே நட்புறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
- மருத்துவ பணியாளர்கள் அலுவலக உதவியாளர்களுக்கு மியூசிக் சேர், வலைப்பந்து, கேரம், செஸ் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
கடத்தூர்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் நூற்றாண்டு விழாவையடுத்து கடத்தூரில் மருத்துவ பணியாளர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் இடையே நட்புறவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
முன்னதாக கடத்தூர் அரசு மருத்துவமனை முன்பிருந்து மாணவர்களின் பேரணி நடந்தது. பேரணியை கடத்தூர் அரசு மருத்துவர் கனல்வேந்தன் துவக்கி வைத்தார்.
பின்னர் மாணவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு இடையே ஸ்ரீ அய்யப்பா ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகள் நடை பெற்றது.
இதில் மாணவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணியாளர்களுக்கு இடையே கைப்பந்து, மட்டைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அலுவலக உதவியாளர்களுக்கு மியூசிக் சேர், வலைப்பந்து, கேரம், செஸ் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளை மொரப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் அரசு தொடங்கி வைத்தார். இதில் கல்லூரியைச் சேர்ந்த அன்பு, பேராசிரியர்கள் ஐயப்பன், ஆம்ஸ்ட்ராங், விஜி உள்ளிட்டோர் மற்றும் மாணவர்கள் செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகள் மற்றும் தனி நபர்களுக்காக பரிசுகளும் வழங்கப்பட்டது.