என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை
- மனைவி வீட்டிற்கு வராததால் உயிரை மாய்த்த கணவர்.
- கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது.
ஒசூர்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் கண்ணன் (27). இவர், ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில், உற்பத்தி பிரிவு அதிகரியாக பணி செய்து வந்தார்.
இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. கண்ணனுக்கு குடிபழக்கம் இருந்ததால், அவரது மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்றுவிட்டார். கடந்த 2 நாட்களுக்கு கண்ணன், தன் மனைவிக்கு போன் செய்து, தாரமங்கலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு அவரது மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கண்ணன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒசூர் டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






