என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் சிப்காட் பகுதியில்   இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது
    X

    ஓசூர் சிப்காட் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய 3 பேர் கைது

    • விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தியிலிருந்துள்ளார்.
    • மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் சிப்காட் அருகேயுள்ள காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 22). இவர் தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டு வாசலில் நிறுத்தியிலிருந்துள்ளார்.

    நேற்று காலை பார்த்தபோது அந்த வண்டியை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசில் பார்த்திபன் புகார் தந்தார்.

    அதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார். அப்போது பார்த்திபனின் இருசக்கர வாகனத்தை திருடியது திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த நரேஷ்குமார். அவனது கூட்டாளிகளான ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்த நந்திகேசன்,ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர்தான் என்பது தெரியவந்தது.

    அவர்களை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தார். கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×