search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில்  கிருஷ்ணகிரி மாவட்டம் 2-ம் நிலையில் உள்ளது-மாவட்ட கலெக்டர் தகவல்
    X

    ஆலோசனைக்கூட்டத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியபோது எடுத்த படம்.

    வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் கிருஷ்ணகிரி மாவட்டம் 2-ம் நிலையில் உள்ளது-மாவட்ட கலெக்டர் தகவல்

    • கிருஷ்ணகிரியில் ஏற்றுமதி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

    ஓசூர்,

    ஓசூரில், மாவட்ட அளவிலான ஏற்றுமதி பங்குதாரர்கள் ஆலோசனைக்கூட்டம், நடைபெற்றது. ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த இக்கூட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார்.

    தொழில்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிசி பச்சுவா, கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன் வரவேற்றார்.

    கூட்டத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:-இந்திய அரசு 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாடுவதையொட்டி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், ஏற்றுமதி மையமாக மேம்படுத்து வதற்கு தேர்வு செய்துள்ள 75 மாவட்டங்க ளில், கிருஷ்ணகிரி மாவட்டமும் ஒன்றாகும்.

    மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட செய ல்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், பங்குதாரர்க ளிட மிருந்து ஆலோசனைகள் மற்றும் உள்ளீடுகளை பெறவும், தலையீடுகளை இறுதிசெய்யவும் இந்த ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஏற்றுமதியில், தமிழ்நாடு 8.97 சதவீதம் மற்றும் மாநிலங்களில் 3-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதியில், நமது மாவட்டம் 15 முதல் 16 சதவீதம் பங்களிக்கிறது. வெளிநாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதில், கிருஷ்ணகிரி மாவட்டம் 2-ஆம் நிலையில் உள்ளது. ஒசூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார். வெளிநாட்டு ஏற்றுமதி இணை இயக்குனர் பி.என்.விஸ்வாஸ். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூடுதல் இயக்குனர் ஜெகதீஷ், சி.எச்.நாடிகர், ஷோபனா குமார், சாந்தகுமார் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    Next Story
    ×