என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு விபத்துகளில்   வாலிபர் உள்பட 2 பேர் பலி
    X

    வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செல்பி பாலம் பகுதியில் சென்றபோது முனிராஜ் அதிவேகமாக வண்டியை ஓட்டியதில் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டார்.
    • முனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த நல்லாம்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் முனிராஜ் (வயது20). சுபகாரிய நிகழ்ச்சிகளில் பூ அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்தார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    செல்பி பாலம் பகுதியில் சென்றபோது முனிராஜ் அதிவேகமாக வண்டியை ஓட்டியதில் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல புலிக்கரை பகுதியை சேர்ந்த மாதையன் (40) விவசாயியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் அல்லியூர் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மாதையன் மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார்.

    இது குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×