என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தருமபுரியில்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
  X

  தருமபுரியில்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் ஆண், பெண் குழந்தைகள் விகிதாசாரம் அறிந்து பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும்
  • குழந்தை திருமணம் நடைப்பெறாமல் தடுக்க வேண்டும்

  தருமபுரி,

  தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

  இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி பேசும்போது தெரிவித்ததா வது:-

  பாலியல் வன்கொ டுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறு வாழ்வு அளித்திட வேண்டும் என்றும், குழந்தை திரு மணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட அவர்களை மீண்டும் கல்வி தொடரவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், குழந்தை திருமணம் நடைப்பெறாமல் தடுக்க வேண்டும் என்றும், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

  பிறப்பு, இறப்பு விகிதாச்சாரம் கணக்கெடுத்து இறப்பிற்கான காரணத்தை கண்டறிந்து அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் ஆண், பெண் குழந்தைகள் விகிதாசாரம் அறிந்து பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும்,

  கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், நகர பஞ்சாயத்து அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம், போன்ற குழு கூட்டங்களை 3 மாதத்திற்கு ஒரு முறை கட்டாயம் நடத்தி பொது மக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  இக்கூட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை மீட்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திடவும், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளித்திடவும், குழந்தைகள் நலக்குழுவின் பணிகள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணிகளை ஆய்வு செய்திடவும் மற்றும் ஆலோசனைகள் வழங்கிடவும், குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் குழந்தைகள் சார்ந்த 27 துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

  இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் இளங்கோ, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பிரமிளா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பினர் சரவணன், சமூக நல அலுவலர் (பொ) மற்றும் திட்ட அலுவலர் ஜான்சிராணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

  Next Story
  ×