search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் சாலையில் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்
    X

    தருமபுரியில் சாலையில் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம்

    • தரும்புரியில் சாலையில் ஓடும் கழிவு நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெசவாளர் காலனி உள்ளது. இதன் அருகே சேலம்- தருமபுரி முக்கிய சாலையான நேதாஜி பைபாஸ் சாலை உள்ளது. இந்த சாலையை ஒட்டி கழிவுநீர் கால்வாய் செல்கிறது இந்த கழிவு நீர் கால்வாயில் நெசவாளர் காலனி பகுதியில் இருந்து வரும் கழிவுநீரும் சேர்ந்து 4 ரோடு வரை கழிவு நீர் கால்வாய் செல்கிறது.

    இந்த நிலையில் நெசவாளர் காலனி அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முன்பு கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு நேதாஜி பைபாஸ் சாலையான முக்கிய சாலையில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சிறு மழைக்கே கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீரானது நேதாஜி பைபாஸ் சாலையில் 4 ரோடு வரை ஒரு கிலோமீட்டருக்கு செல்கிறது. பெருமழை வரும்போது நேதாஜி பைபாஸ் சாலையில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறு போல் ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது மட்டுமின்றி நோய் தொற்றுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து நாளிதழ்களில் பலமுறை செய்தி வெளியிட்டும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தருமபுரி நகரப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் முக்கிய சாலையில் மழைக்கா லங்களில் கழிவுநீர் கால்வாயாக மாறி உள்ளதை வருட கணக்கில் கண்டும் காணாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட நிர்வாகமும் நகராட்சியும் உடனடியாக நேதாஜி பைபாஸ் சாலை இரு புறமும் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி புதுப்பிக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×