என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில்   சட்ட விரோதமாக சந்துக்கடைகளில் மது விற்பனை
    X

    தருமபுரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக சந்துக்கடைகளில் மது விற்பனை

    • சந்து கடைகள் முளைத்து விவசாயக் கூலி தொழிலாளர்களை முழு நேர மது பிரியர்களாக மாற்றி வருவதாக கிராமப் பகுதி பெண்மணிகள் குமுறி வருகின்றனர்.
    • மது விற்பனை குறித்த வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலாக தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் சுமார் 68 அரசு மதுபான கடைகள் உள்ளது. இருந்த போதிலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெளி மாநில மதுபாட்டில்கள் மற்றும் அரசு மது பாட்டில்கள் அமோகமாக விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பாலக்கோடு பைபாஸ் சாலையையொட்டியும் , புதூர் மாரியம்மன் கோவில் எதிரிலும், கக்கன்ஜிபுரத்திலும் 4 ரோடு சந்திப்பிலும் ஏராளமனோர் பகல், இரவு என எந்த நேரத்திலும் மது பாட்டில்கள் கிடைக்கும் வகையில் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜருகு சாமி செட்டிபட்டி ஏலகிரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சந்து கடைகள் முளைத்து விவசாயக் கூலி தொழிலாளர்களை முழு நேர மது பிரியர்களாக மாற்றி வருவதாக கிராமப் பகுதி பெண்மணிகள் குமுறி வருகின்றனர்.

    மது விற்பனை குறித்த வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலாக தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    தருமபுரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் சந்து கடைகள் பெருகி வருவது வருத்தம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவர்களுக்கு அரசு மதுபான கடைகளில் இருந்து மொத்தமாக விற்பனை செய்வதே இதற்கெல்லாம் காரணம் எனவும் காவல் துறையினருக்கு தெரிந்தே இது போன்ற செயல்கள் நடைபெறுகிறது எனவும், அதே போல் மொத்தமாக விற்பனை செய்யும் அரசு மதுபான கடை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×