search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில்  முள்ளங்கி வரத்து அதிகரிப்பால் விலை கடும் சரிவு  -கிலோ ரூ.4-க்கு விற்பதால் விவசாயிகள் வேதனை
    X

    முள்ளங்கி அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி வரத்து அதிகரிப்பால் விலை கடும் சரிவு -கிலோ ரூ.4-க்கு விற்பதால் விவசாயிகள் வேதனை

    • 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பி ரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் முள்ளங்கி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    40 நாட்களில் அறு வடைக்கு வருவதால் பெரும்பாலான விவசாயி கள் முள்ளங்கி சாகுபடி செய்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக நல்ல மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியது.

    இதனால் தருமபுரி மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள முள்ளங்கி அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்பொழுது மாவட்டத்தில் மாரண்டஹள்ளி, காரிமங்க லம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முள்ளங்கி அறுவடை செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் முள்ளங்கி வரத்து குறைந்து விலை அதிகரித்து கிலோ ரூ.25 -க்கு விற்பனையானது. இந்நிலையில் தற்போது முள்ளங்கி வரத்து அதிகரித்து விலை கடும் விலை சரிந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.2 முதல் 4 ரூபாய் வரை அடிமாட்டு விலைக்கே வாங்கிச் செல்கின்றனர்.

    இதனால் அறுவடை செய்யும் கூலி கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். கடந்த சில தினங்களுக்கு முன் நல்ல விலைக்கு விற்கப்பட்ட முள்ளங்கி தற்போது ஒரு கிலோ 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

    Next Story
    ×