என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில்   காவலர் பயிற்சி பள்ளி காவலர்களுக்கு   துப்பாக்கி சுடும் பயிற்சி
    X

    தருமபுரி மாவட்டத்தில் காவலர் பயிற்சி பள்ளி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

    • காவலர் பயிற்சி பள்ளி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.
    • இப்பயிற்சியில் பள்ளி முதல்வர் மாவட்ட எஸ்.பி.கலைசெல்வன், தலைமையில் துணை முதல்வர்,டி.எஸ்.பி. பாஸ்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப் இன்ஸ்பெக்டர் சின்னசாமி ஆகியோர் வழங்கினர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட ஆயுத படை யில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.

    இந்தாண்டு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 220 பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கான பயிற்சி கடந்த மார்ச் 14 ம் தொடங்கியது.

    தொடர்ந்து போலீசாருக் கான அடிப்படை பயிற்சிகள், உடற் பயிற்சிகள், கவாத்து பயிற்சி,ஆயுதபயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி,சட்ட பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் கொடுக்க படுகிறது.

    இதில் நேற்று தருமபுரி அருகே ஒடசல்பட்டி மூக்கனூர் வனப்பகுதியில் காவலர் பயிற்சி பள்ளி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் பள்ளி முதல்வர் மாவட்ட எஸ்.பி.கலைசெல்வன், தலைமையில் துணை முதல்வர்,டி.எஸ்.பி. பாஸ்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப் இன்ஸ்பெக்டர் சின்னசாமி ஆகியோர் வழங்கினார்கள்.

    இந்த துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஏ.கே.47, எஸ்.எல்.ஆர்,303,410 மஸ்கட்,9எம்.எம்.கார்பைன்,.22 என ஆறு வகையான துப்பாக்கிகள் மூலம் எவ்வாறு சுடுவது, எவ்வாறு பயன்படுத்துவது,என சிறப்பு பயிற்சிகள் அளிக்கபடுகிறது.

    இந்த பயிற்சி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×