search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில்  1720 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன-  கலெக்டர் சாந்தி தகவல்
    X

    நல்லானூரில் கலெக்டர் சாந்தி தலைமையில் மின்சக்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அருகில் எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டத்தில் 1720 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன- கலெக்டர் சாந்தி தகவல்

    • இந்த 2022-2023 ஆண்டிற்கு 4448 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இது வரை 1720 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
    • புதிய வேளாண் மின் இணைப்பு சேவைக்கும், இணையதளம் வாயிலாக பதிவுகள் பெறப்படும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நல்லானூர் ஜெயம் மஹாலில் தருமபுரி மின் பகிர்மான வட்டம் சார்பில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை முன்னிட்டு ஒளிமிகு பாரதம் - ஒளிமயமான எதிர்காலம் மின்சக்தி @2047 - விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையேற்று பேசும்போது தெரிவித்த தாவது:-

    முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி, நம்முடைய தமிழ்நாடு அரசு மின்துறையானது ரூ.803 கோடி செலவில் 2.13 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்தினை உள்ளடக்கி ஒரு லட்சம் விவசாய

    மின் இணைப்புகளை

    கடந்த ஓராண்டில் வழங்கியுள்ளது.

    இதில் தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் 6848 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இலக்கை மிஞ்சி 6927 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் இந்த 2022-2023 ஆண்டிற்கு 4448 விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இது வரை 1720 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    தொடர்ந்து விவசாய மின் இணைப்புகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும், இந்த தருனத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

    மாநில அளவில், மின்னகம் என்கின்ற, மின் நுகர்வோர் குறை தீர்ப்பு மையம் மூலம் குறைகள் இணையதளம் (online) பதிவு செய்யப்பட்டு, உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

    இதன்படி மாநில அளவில் மையப்படுத்தப்பட்ட "மின்னகம்" மின் நுகர்வோர் சேவை மையம் அலைபேசி எண்: 9498794987 தொடங்கப்பட்ட 20.06.2021 முதல் 18.07.2022 வரை 9,82,000 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு அதில் 9,72,180 (99%) அழைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன. புதிய வேளாண் மின் இணைப்பு சேவைக்கும், இணையதளம் வாயிலாக பதிவுகள் பெறப்பட்டு, எந்த விதத்திலும், பதிவு மூப்பு விடுபடாமல் தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத் தன்மை யோடு, அந்தப் பதிவுகள் பதியப்பட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் முதலில் இருக்கும் பதிவுதாரர்களுக்கு, முன்னுரிமை வழங்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இவ்விழாவில் பென்னா கரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தருமபுரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார், ஏரியூர் பழனிசாமி, பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×