search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில்   1928 மையங்களில் நாளை 38-வது மெகா தடுப்பூசி முகாம்   -கலெக்டர் சாந்தி தகவல்
    X

    தருமபுரி மாவட்டத்தில் 1928 மையங்களில் நாளை 38-வது மெகா தடுப்பூசி முகாம் -கலெக்டர் சாந்தி தகவல்

    • க்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • 38 வது “மெகா தடுப்பூசி முகாம்” நடைபெற உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையாக கட்டுப்படுத்திட கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி தருமபுரி மாவட்டத்திலும் கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் செலுத்துவதை இலக்காக கொண்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 1928 சிறப்பு முகாம்களில் நாளை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணிவரை 38 வது "மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது.

    தருமபுரி மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து கொரோனா நோய் தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும், "மெகா தடுப்பூசி முகாமினை" பயன்படுத்திக்கொண்டு தகுதி உடைய அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×