search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்   தொடரும் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடரும் சாரல் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    • காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
    • இன்றும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

    தருமபுரி,

    தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது "மாண்டஸ்" புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ. தொலைவில் நிலைகொண்டு நேற்று நள்ளிரவு கரையை கடந்தது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இன்றும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, மொரப்பூர், கடத்தூர், தருமபுரி, பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு, அதியமான்கோட்டை உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று மாலை முதல் இன்று காலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டினம், பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை, ஓசூர், சூளகிரி, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில், தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) 2-வது நாளாக விடுமுறை அறிவித்து கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

    Next Story
    ×