என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒசூர் சார் ஆட்சியர் சரண்யா, கோவில் தலைவர் மது (எ) ஹேம்நாத், சூளகிரி தாசில்தார் பன்னீர் செல்வி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தாசனபுரத்தில்வெங்கடேஸ்வரா சாமி கோவில் தேர் திருவிழா
- வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- ஊர் பிரமுகர்கள், ஊர் தலைவர்கள் ஊர் பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், தோரிப்பள்ளி ஊராட்சி, தாசனபுரம்கிராமத்தில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வெங்கடேஸ்வரா சாமி கோவிலில் ஆண்டுதோறும் 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனையொட்டி வெங்டேஷ்வரா சாமி பூக்களால் அலங்கரித்து தேர் மீது அமர்த்தி மங்கல இசை முழங்க தேரோட்டம் நடைபெற்றது.
இன்று காலை 10 மணியளவில் கோவில் தலைவர் மற்றும் சூளகிரி முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான மது (எ) ஹேம்நாத் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக ஓசூர் சப் கலெக்டர் சரண்யா மற்றும் சூளகிரி தாசில்தார் பன்னீர் செல்வி, ஊர் பிரமுகர்கள், ஊர் தலைவர்கள் ஊர் பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுத்து சென்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் தாசன்புரம், அத்தி முகம், பேரிகை, டோரிப்பள்ளி, அட்டகுறுக்கி, புக்காசாகரம், சூளகிரி, காமன்தொட்டி, பேரன்டப்பள்ளி, கோபசந்திரம், ஒசூர், மாலுர், மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமியை தரிசனம் செய்தனர். பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.






