search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில்  இயற்கை வள பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    கோவையில் இயற்கை வள பாதுகாப்பு கூட்டு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • குளங்களை சுற்றி ஆக்கிரமித்துள்ள நீர்நிலைகளை காத்திட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
    • கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வடவள்ளி:

    இயற்கை வள பாதுகாப்பு கூட்டு இயக்கம் சார்பில் கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நேர்டு தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் காமராசு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோவை மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாத்திடவும், அதை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்றவும், பழங்குடி மக்களின் நிலங்களை மீட்டு , மீண்டும் பழங்குடி மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். நொய்யல் மற்றும் கோவையில் உள்ள குளங்களை சுற்றி ஆக்கிரமித்துள்ள நிலங்களை கைப்பற்றி நீர்நிலைகளை காத்திட வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிங்கிரி மலை பழங்குடி பாதுகாப்பு குழு, மேற்கு தொடர்ச்சி மலை வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு இயக்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், தமிழ் சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய இறையாண்மை இயக்கம், மே 17 இயக்கம், திராவிட மக்கள் இயக்கம், தமிழர் விடியல் கட்சி, கோவை மக்கள் ஒற்றுமை மேடை, சிபிஎம், சிபிஐ, தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், ஆதித்தமிழர் பேரவை, திராவிட தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, விடுதலை சிறுத்தைகள்

    Next Story
    ×