search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூரில்   காளியம்மன்,செல்லியம்மன் கோவில் திருவிழா
    X

    அரூர் பெரிய ஏரி கரையில் எழுந்தருளியுள்ள செல்லியம்மன் கோவிலுக்கு குதிரைமீது வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த சின்ன, பெரிய செல்லியம்மன் சுவாமிகள்.

    அரூரில் காளியம்மன்,செல்லியம்மன் கோவில் திருவிழா

    • வீட்டு மாரியம்மனுக்கு கரகம் எடுத்தல், காளியம்மன் சுவாமிக்கு நீர் மற்றும் பால் குடம் எடுத்தல், சக்தி அழைத்து கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுவாமிகள் குதிரை மீது அமர்ந்து அரூர் பெரிய ஏரியின் கரையில் எழுந்தருளியுள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்துக்கு ஊர்வலமாக சென்றது.

    அரூர்,

    அரூரில் காளியம்மன், சின்ன செல்லியம்மன் மற்றும் பெரிய செல்லியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

    அரூரை அடுத்த பிச்சன்கொட்டாய் கிராமத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன், சின்ன செல்லியம்மன் மற்றும் பெரிய செல்லியம்மன் கோவில் திருவிழா 11 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, வீட்டு மாரியம்மனுக்கு கரகம் எடுத்தல், காளியம்மன் சுவாமிக்கு நீர் மற்றும் பால் குடம் எடுத்தல், சக்தி அழைத்து கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், வர்ணதீர்த்தம் வர்ணீஸ்வரர் கோவில் இருந்து சுவாமி வீதி உலா சென்று, அரூர் பெரிய ஏரியில் சின்ன செல்லியம்மன் மற்றும் பெரிய செல்லியம்மன் ஆகிய சுவாமிகள் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து, சுவாமிகள் குதிரை மீது அமர்ந்து அரூர் பெரிய ஏரியின் கரையில் எழுந்தருளியுள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்துக்கு ஊர்வலமாக சென்றது.

    இதையடுத்து, ஏரிகரை மீது பக்தர்கள் பொங்கல் வைத்தும், ஆட்டு கிடா பலியிட்டும் தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

    இந்த திருவிழாவில், கோவில் தர்மகர்த்தா செல்லன், விழாக்குழுத் தலைவர் மணி, செயலர் பழனி, பொருளர் சுப்பிரமணி, பூசாரி மனோகரன், நிர்வாகிகள் தனபால், பெருமாள், மூர்த்தி உள்ளிட்ட பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×