என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அரூரில் ஏ.டி.எம்.மில் கிடந்த 20 ஆயிரம் பணம் போலீசாரிடம் ஒப்படைப்பு
  X

  அரூரில் ஏ.டி.எம்.மில் கிடந்த 20 ஆயிரம் பணம் போலீசாரிடம் ஒப்படைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மத்திய கூட்டுறவு வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
  • யாரோ பணத்தை எடுத்து, ஏடிஎம் எந்திரத்தின் மேல் வைத்துவிட்டு மறந்து விட்டு சென்றுள்ளனர்.

  அரூர்,

  தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள சோரிம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் அரூர் பைபாஸ் சாலையின் அருகேயுள்ள மத்திய கூட்டுறவு வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.

  அப்பொழுது ஏடிஎம் எந்திரத்தின் மேல் 500 ரூபாய் தாள்கள் ரூ.20,000 இருந்துள்ளது. முன்னதாக ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வந்த யாரோ பணத்தை எடுத்து, ஏடிஎம் எந்திரத்தின் மேல் வைத்துவிட்டு மறந்து விட்டு சென்றுள்ளனர்.

  இதனை கண்ட ஆனந்தன், இருபதாயிரம் பணத்தை எடுத்து அரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் பாபுவிடம் ஒப்படைக்க தகவல் தெரிவித்த நிலையில் அரூர் காவல் நிலையத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

  ரூ.20,000 ஆயிரம் ஒப்படைக்க பட்ட பிறகு பணத்தை தவறவிட்டவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்களிடம் பணத்தை ஒப்படைக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

  ஏடிஎம் எந்திரத்தில் கேட்பாரற்று கிடந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்று காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஆனந்தனை காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்.

  Next Story
  ×