என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பரமத்தி அருகே கோழிப்பண்ணையில் வெளிமாநில பெண் தூக்குப் போட்டு தற்கொலை
- கடந்த 6 மாதங்களாக பரமத்தி அருகே காளிபாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
- மனிஷா கவுடே தங்கி இருந்த வீட்டின் கழிவறையில், துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பரமத்திவேலூர்:
சத்தீஸ்கர் மாநிலம், கிஸ்கோ டா பகுதியைச் சேர்ந்தவர் சந்துராம் கவுடே. இவரது மகள் மனிஷா கவுடே (வயது 18).இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 6 மாதங்களாக பரமத்தி அருகே காளிபாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை மனிஷா கவுடே வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அவருடன் வேலை பார்த்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மனிஷா கவுடே தங்கி இருந்த வீட்டின் கழிவறையில், துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் மனிஷா கவுடேவின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.