என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே 2 விபத்துகளில்  கட்டிட தொழிலாளி-வாலிபர் சாவு
    X

    கிருஷ்ணகிரி அருகே 2 விபத்துகளில் கட்டிட தொழிலாளி-வாலிபர் சாவு

    • வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
    • அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கர்நாடக மாநிலம் கோரணப்பபாளய பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 47).இவர் கட்டிடங்களில் குடிநீர் குழாய் இணைப்பு தரும் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் காரக்குப்பம் ஜங்சன் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த மனோகரன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து மனோகரனின் மனைவி வெண்ணிலா தந்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல சூளகிரி பகுதியில் நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் நடந்து சென்ற மோஹன்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×