என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓசூர், மத்திகிரியில் ரூ.3.75 கோடியில் அரசு கட்டிடங்கள் திறப்பு  -காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
  X

  ஓசூர், மத்திகிரியில் ரூ.3.75 கோடியில் அரசு கட்டிடங்கள் திறப்பு -காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
  • கருத்தரிப்பு தொழில் நுட்ப மையம் மற்றும் பொலிகாளை கொட்டகைக் கட்டிடங்களை பார்வையிட்டனர்.

  ஓசூர்,

  ஓசூரில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கள கண்காணிப்பு கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் அலுவலக கட்டிடம் மற்றும் மத்திகிரி கால்நடைப்பண்ணை வளாகத்தில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆய்வுக் கூட கருத்தரிப்பு தொழில் நுட்ப மையம் மற்றும் பொலிகாளை கொட்டகைக் கட்டிடம் என மொத்தம் ரூ.3 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக நேற்று திறந்து வைத்தார்.

  தொடர்ந்து மத்திகிரி கால்நடைப்பண்ணை வளாகத்தில் கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி, ஓசூர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.எ., ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி வைத்து, ஆய்வுக்கூட கருத்தரிப்பு தொழில் நுட்ப மையம் மற்றும் பொலிகாளை கொட்டகைக் கட்டிடங்களை பார்வையிட்டனர்.

  இந்த நிகழ்ச்சியில், ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், உதவி இயக்குனர்கள் இளவரசன், அருள்ராஜ், ரவிச்சந்திரன் ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×