என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் மாநகராட்சி பகுதியில்   பாதாள சாக்கடை திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்-    ஜி.கே.மணி எம்.எல்.ஏ.பேட்டி
    X

    ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது எடுத்தப்படம்.

    ஓசூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்- ஜி.கே.மணி எம்.எல்.ஏ.பேட்டி

    • வகுப்பறையில் மது அருந்துவது, போதைப்பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்கள் மிகவும் வேதனை அளிக்கிறது.
    • ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டுவரவேண்டும்.

    ஓசூர்,

    ஓசூரில் பா.ம.க.கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வகுப்பறைகளில் மாணவர்கள், ஆசிரியர்களை திட்டுவதும், தாக்குவதும், மிரட்டுவதும் மற்றும் வகுப்பறையில் மது அருந்துவது, போதைப்பொருட்களை பயன்படுத்துவது போன்ற செயல்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    அதே போல், ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டுவரவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், பா.ம.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர், நானும் சட்டமன்றத்தில் பேசினேன். பா.ம.க. சார்பில், போராட்டமும் நடத்தப்பட்டது.

    தமிழக அரசு இதனை ஏற்று,இது தொடர்பாக , ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் விசாரணை குழு அமைத்து, 2 வாரத்திற்குள் முழு அறிக்கை தாக்கல் செய்ததும், நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பதை பா.ம.க.வரவேற்கிறது.

    ஓசூர் பகுதியில் மலர்கள், காய்கறிகள் சாகுபடி அதிகளவில் இருந்து வருகிறது. விவசாயி களுக்கு கூடுதல் மானியம் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினால், உற்பத்தியும் பெருகும், ஏற்றுமதி மேலும் அதி கரிக்கும். ஓசூர் பகுதியில் விமான போக்குவரத்து சேவையை உடனடியாக தொடங்க வேண்டும்

    புதிதாக ஓசூர் மாந கராட்சி உருவாக்கப்பட்டு, மேயர், மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள னர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஓசூர், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று முதன்முதலில் குரல் கொடுத்ததே நான் தான். ஓசூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் கானல் நீராகவே உள்ளது. இதனை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

    மேகதாது அணை திட்டத்தை, கர்நாடக அரசு செயல்படுத்தக்கூடாது. தேர்தலை மனதில் வைத்து கர்நாடக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. மத்திய அரசு இதற்கு அனுமதி வழங்கக்கூடாது.பா.ம.க.வை பொறுத்த வரை, தமிழ்நாட்டில் ஆக்க பூர்வமான எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார். பேட்டியின்போது மேற்கு மாவட்ட செயலாளர் அருண்ராஜன், பா.ம.க. வக்கீல்கள் சமூக நீதி பேரவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் கனல் கதிரவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×