என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் உடையப்பட்டியில் ஹோமியோபதி மாணவி தற்கொலை முயற்சி
- நாமக்கல் மாவட்டம் ராசி புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
- மனமுடைந்த மாணவி, அரளி விதையை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
சேலம்:
சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த 24 வயது இளம்பெண், நாமக்கல் மாவட்டம் ராசி புரம் பகுதியில் உள்ள தனியார் ஹோமியோபதி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு கல்லூரியில் கட்டண பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது பெற்றோரிடம் மாணவி பலமுறை கூறியும் பெற்றோர் கட்டணத்தை செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி, அரளி விதையை அரைத்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதனைப் பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






