search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடுவெட்டி கிராமத்தில் இல்லம் தேடிக்கல்வி
    X

    மாணவர்கள் செய்தித்தாள் வாசித்து சாதனை செய்தனர்.

    காடுவெட்டி கிராமத்தில் இல்லம் தேடிக்கல்வி

    • அனைத்து மாணவர்களும் செய்தித்தாள் வாசிக்கும் அளவிற்கு திறன் பெற்றுள்ளார்கள்.
    • மாணவர்களும் விடுப்பு எதுவும் எடுக்காமல் வருகை தருவதுபாராட்டுக்குரியது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் காடுவெட்டி கிராமத்தில் இல்லம் தேடிக்கல்வி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

    இல்லம் தேடிக் கல்வி மையத்தைதன்னார்வலர் ஷர்மிலி கடந்த 1 வருடங்களாக 30 மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து வருகின்றார். அதனை சேத்திருப்புபள்ளி தலைமை ஆசிரியர் கண்காணித்து மாணவர்களை உற்சாகப்படுத்திவருகிறார்.

    ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ்மையத்திற்கு தேவையானவசதிகளை செய்து வருகிறார்.

    ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சுடர் மணி, அருள், சுப்பிரமணியன், ஜோதிமணி மற்றும் ஊர் முக்கியஸ்த ர்கள்அனைவரும் மையம் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

    முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த திட்டமான இல்லம் தேடிக்கல்வி திட்டம் கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை போக்கியுள்ளதுஎன்று பள்ளி தலைமை ஆசிரியர் பாலு கூறினார்.

    மேலும் இதன் விளைவாக 30 மாணவர்களும் விடுப்பு எதுவும் எடுக்காமல் வருகை தருவதுபாராட்டுக்குரியது என்றும் அனைத்து மாணவர்களும் செய்தித்தாள் வாசிக்கும் அளவிற்கு திறன் பெற்றுள்ளார்கள்.

    செய்தி த்தாள் வாசிப்பதன் மூலம் அனைத்து அறிவுகளையும் சேர்த்து வருகின்றனர்.மாணவர்களின் பெற்றோர்கள் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தைம பாராட்டி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×