என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெண்கள் தலையில் புனித நீர் கலசங்களை சுமந்து ஊர்வலமாக, மலைக்கோவிலுக்கு கொண்டு சென்ற காட்சி.
சந்திர சூடேஸ்வரர் கோவில் புனிதநீர் ஊர்வலம்
- கோபுர கலசங்களில் ஊற்றுவதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, மானசரோவர் உள்ளிட்ட 12 நதிகளிலிருந்து புனித நீர் நேற்று கொண்டுவரப்பட்டது.
- மேலும் ஒரு வேனிலும், நதிகளின் நீர் நிரப்பப்பட்ட கேன்கள் மலைக்கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டு, நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி கோபுர கலசங்களில் ஊற்றுவதற்காக கங்கை, யமுனை, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, மானசரோவர் உள்ளிட்ட 12 நதிகளிலிருந்து புனித நீர் நேற்று கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து ஓசூர் ராமநாயக்கன் ஏரி அருகில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில், நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் மேளதாளம் முழங்க 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் புனித நீர் கலசங்களை சுமந்தவாறு ஊர்வலமாக, மலைக்கோவிலுக்கு கொண்டு சென்றனர்.
மேலும் ஒரு வேனிலும், நதிகளின் நீர் நிரப்பப்பட்ட கேன்கள் மலைக்கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டன. இதில், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






