என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகர பகுதிகளுக்குள் உணவு தேடி வரும் மயில் கூட்டங்கள்
- அரூர் உள்ளிட்ட பகுதிகளில் காடுகளை ஒட்டி விளைநிலங்கள் உள்ளன.
- நகரப் பகுதியை ஒட்டி மயில்கள் உணவு தேடி வருவது வாடிக்கையாகி உள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் விவசாயம் நிறைந்த மாவட்டம். மாவட்டத்தில் பென்னாகரம். பாலக்கோடு. அரூர் உள்ளிட்ட பகுதிகளில் காடுகளை ஒட்டி விளைநிலங்கள் உள்ளன.
இப்பகுதிகளில் காடுகளில் உள்ள மயில் கூட்டங்கள் உணவு தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள வயல்களில் தேவையான இரைகளை தேடி வருவது வழக்கம்.
தற்போது கோடை காலம் தொடங்கும் தருணம் என்பதால் வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மயில்கள் காடுகளில் இருந்து வெளியேறி விவசாய விளை நிலங்களை நோக்கி வருகிறது.
காடுகளில் இருந்து யானை கூட்டங்கள் தான் உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து வந்தது. தற்பொழுது தருமபுரி நகரப் பகுதி ஒட்டி உள்ள அன்னசாகரம். எரங்காட்டு கொட்டாய் .தருமபுரி நான்கு ரோடு அருகே உள்ள குமாரசாமிபேட்டை உள்ளிட்ட நகரப் பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் மயில்கள் உணவு தேடி வருவது வாடிக்கையாகி உள்ளது.
காடுகள் அருகே உள்ள பகுதிகளில் மட்டும் சுற்றித்திரிந்த மயில் கூட்டங்கள் தற்போது தருமபுரி மாவட்ட மக்களோடு மக்களாக சேர்ந்து வாழும் நிலையில் நகர்புறத்திலும் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.