search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் சென்டரல் சட்டக்கல்லூரியில் நடந்ததேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் தஞ்சை மாணவர்களுக்கு முதல் பரிசு
    X

    போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, சுந்தர் மோகன் ஆகியோர் பரிசு வழங்கிய காட்சி.

    சேலம் சென்டரல் சட்டக்கல்லூரியில் நடந்ததேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் தஞ்சை மாணவர்களுக்கு முதல் பரிசு

    • சேலம் சென்டரல் சட்டக்கல்லூரியில் பேராசிரி யர் ஆர்.வி.தனபாலன் - தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.
    • நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு மாநிலங்களை சார்ந்த 28 சட்டக்கல்லூரி மாணவ குழுக்கள் கலந்துகொண்டன.

    சேலம்:

    சேலம் சென்டரல் சட்டக்கல்லூரியில் பேராசிரி யர் ஆர்.வி.தனபாலன் - தேசிய அளவிலான மாதிரி நீதிமன்ற போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலிமிருந்து பல்வேறு மாநிலங்களை சார்ந்த 28 சட்டக்கல்லூரி மாணவ குழுக்கள் கலந்துகொண்டன. இப்போட்டிகளின் நடுவர்க ளாக பல்வேறு கல்லூரிகளை சார்ந்த பேராசிரியர்களும், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறி ஞர்களும், பார் கவுன்சில் உறுப்பினர்களும் அரசு வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

    விழாவில் கல்லூரி உதவிப் பேராசிரியை சாந்தகு மாரி வரவேற்புரை ஆற்றி னார். அதனை தொடர்ந்து கல்லூரியின் தலைவரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலின் துணைத்த லைவருமான சரவணன் அறிமுக உரையாற்றினார்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலின் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தலைமை உரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் சிறப்புரையாற்றினார். விழாவில் நீதிபதி எ.டி.ஜெகதீஷ் சந்திரா நிறைவுரை ஆற்றினார்.

    போட்டிகளில் முதல் பரிசை தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் சாமிநா தன், ஆதித்தியா மற்றும் கிருஷ்ணப்ரசாத் ஆகியோர் வென்றனர். 2-ம் பரிசை பெங்களூருவில் உள்ள யுனிவர்சிட்டி சட்ட கல்லூரி மாணவிகள் ஆசால் மென்சீஸ், ஹெப்சா, மற்றும் நவோதிதா ஆகியோர் வென்றனர்.

    மேலும் மிகச்சிறந்த ஆய்வாளர் என்ற பரிசை சென்னை புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கார் அரசு சட்ட கல்லூரியும், சென்னை பி.எஸ்.அப்துல் ரஹ்மான் கிரசென்ட் கல்லூரியும், பெற்றன. சிறந்த வாத திறமை மாணவருக்கான பரிசை சேலம் அரசு சட்ட கல்லூரியும், சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், சிறந்த வாத திறமை மாணவிக்கான பரிசை பெங்களூர், யுனிவர்சிட்டி சட்ட கல்லூரியும், கோவை அரசு சட்டக்கல்லூரியும் பெற்றன.

    சிறந்த நன்னடத்தை அணிக்கான பரிசை தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக அணியும், பெங்களூர், யுனிவர்சிட்டி சட்ட கல்லூரி அணியும் பெற்றன. சிறந்த வழக்காவண தயாரிப்புக்கான பரிசை பெங்களூரு அலையன்ஸ் பல்கலைக்கழக அணியும், திருச்சி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக அணியும் பெற்றன. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ குழுக்களுக்கு கேடயம் பரிசுகளை நீதிபதிகள் வழங்கினார்கள்.

    கல்லூரியின் உதவி பேராசிரியர் அருண் ராம்நாத் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை போட்டியின் ஒருங்கிணைப்பாளர் கல்லூரியின் உதவி பேராசிரியை சாந்தகுமாரி மற்றும் மாதிரி நீதிமன்ற போட்டிகளுக்கான குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். கல்லூரியின் தலைமை நிர்வாகி மாணிக்கம், கல்லூரியின் முதல்வர் பேகம் பாத்திமா, கல்லூரியின் டீன் டாக்டர் டி.என்.கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×