என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை
    X

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று மாலை பரவலாக பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மழையின் காரணமாக தருமபுரி அரசு போக்குவரத்து கழக அலுவலகம் அருகில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை படத்தில் காணலாம்.

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை

    • நேற்று மாலை முதல் தருமபுரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது.
    • வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்து சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி,

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, பருவநிலை மாற்றத்தால் காலதாமதமாக தொடங்கியுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பருவநிலை மாற்றத்தால் காலதாமதமாக மழை பெய்ய தொடங்கியுள்ளது.

    தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் தகவல் தெரிவித்தது.

    இந்த நிலையில் கேரளா, கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது. அதன் தாக்கமாக தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

    நேற்று மாலை முதல் தருமபுரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்து சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதே போல் நேற்றுமாலை முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பரவாக மழை பெய்துள்ளது.

    மேலும் தருமபுரி 7 மில்லி மீட்டர், பாலக்கோடு 6.2 மில்லி மீட்டர், மாரண்டஅள்ளி 6 மில்லி மீட்டர், பென்னாகரம் 5 மில்லி மீட்டர், ஒகேனக்கல் 3 மில்லி மீட்டர், அரூர் 27.2 மில்லி மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி 18 மில்லி மீட்டர், என மொத்தம் 72.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×